ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி - திருமலை இடையே 10 மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
2022-09-27@ 19:27:02

திருமலை: ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி திருமலை இடையே 10 மின்சார பேருந்து சேவையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். திருமலை - திருப்பதியை மையமாக கொண்டு முதல் முறையாக மின்சார பேருந்துகளை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் 100 மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈவே டிரான்ஸ் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனம் இதற்கான ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மலைப்பாதையில் சோதனை ஓட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரம்மோற்சவத்தையொட்டி 10 மின்சார பேருந்துகளை முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்தார். டிசம்பர் மாதத்திற்குள் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதில் திருப்பதி மலைப்பாதை சாலையில் 50 பேருந்துகள் அலிபிரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. மேலும், ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலைக்கு 14 பேருந்துகளும், திருப்பதியில் இருந்து மதனப்பள்ளிக்கு 12 பேருந்துகளும், திருப்பதியில் இருந்து நெல்லூருக்கு 12 பேருந்துகளும், கடப்பாவுக்கு 12 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் பெற்றுள்ள எவே டிரான்ஸ் நிறுவனம், 12 ஆண்டுகளுக்கு இவற்றை நிர்வகிக்க உள்ளது. டிசல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளதால் சுற்று சூழல் மாசு ஏற்படுத்தும் கார்பன் உமிழ்வை வெளியேற்றும் மாசுப கட்டுப்படுத்த முடியும்.
100 மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதால் கார்பன் வெளியேறுவது ஆண்டுக்கு 5,100 மெட்ரிக் டன் குறைக்க முடியும். ஏ.சி. பேருந்தின் மூலம் டிசல் கிலோமீட்டருக்கு ரூ.28.75 செலவாகும், அதே மின்சார பேருந்தின் பயன்பாட்டின் மூலம் கிலோமீட்டருக்கு ரூ.7.70 மட்டுமே செலவாகும். வரும் நாட்களில் மின்சார பேட்டரிகளின் விலை குறையும் என்பதால் பராமரிப்பு செலவு மேலும் குறைய வாய்ப்புள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
நமது நிர்வாக நடைமுறைகள் மிகத் திறன் வாய்ந்தது: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
பெங்களுருவில் இந்திய எரிசக்தி வாரத்தை பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண இருக்கும் பிரதமர் மோடி..?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்: டெல்லியில் சி.வி.சண்முகம் பேட்டி
சுப்ரீம் கோர்ட் அமர்வில் சிங்கப்பூர் தலைமை நீதிபதி
பிபிசி ஆவணப்படம் விவகாரம் ஒன்றிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!