பல்வேறு மாவட்டங்களில் இன்று உலக சுற்றுலா தினம் கடைபிடிப்பு... கரகாட்டம், மயிலாட்டம் ஆடி கலைஞர்கள் அசத்தல்
2022-09-27@ 17:00:35

சென்னை: உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாட்டில் மாமல்லபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக ஐ.நா. சபை கடந்த 1970ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. இதை தொடர்ந்து ஆண்டுதோறும் அந்நாளில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்பேரில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் இணைந்து உலக சுற்றுலா தினத்தை கொண்டாடியது.
அர்ஜுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்டவைகளை ரசிக வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் மாலை அணிவித்து வரவேற்று இனிப்புகளை வழங்கினார். வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டதுடன் முக்கிய வீதிகளில் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். மேலும் கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமியக்கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதேபோன்று கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த பயணிகளுக்கு இனிப்புகள், மலர்கொத்துக்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உதகை வந்த சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு மலைரயிலில் வந்த நூற்றுக்கணக்கான பயணிகள் ரோஜா மலர் மட்டும் இனிப்புகள் கொடுத்து அன்புடன் வரவேற்கப்பட்டனர். இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். உதகை மலை ரயிலின் சிறப்பை பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக ஓவியர் ஒருவர் மலைரயிலில் சுற்றுலா பயணிகள் முன்பாக வரைந்து காட்டினார். நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
குழந்தையை கட்டைப்பையில் வீசிச்சென்ற பெண்கள் அடையாளம் தெரிந்தது
திருமங்கலம், எழுமலையில் மரக்கடை நிறுவனத்தில் ரெய்டு: வருமானவரித்துறை அதிரடி
ராமேஸ்வரம் கோயிலில் நாளை தெப்ப உற்சவம்: பகல் முழுவதும் நடையடைப்பு
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் கோலாகலமாக நடந்தது தெப்பத்திருவிழா: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா; ஆழியார் ஆற்றங்கரையோரம் நள்ளிரவு மயான பூஜை: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மிஸ் இந்தியா அழகி போட்டிக்குத் தயாராகும் திருநங்கை: மனம் தளராமல் சுயதொழில் செய்து குடும்பத்திற்கு உதவி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!