ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது: பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
2022-09-27@ 15:49:50

சென்னை: ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நடத்திய ஆலோசனையில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில அரசு தலையிட்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ஆம்னி பேருந்து களின் அனைத்து சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வரும் அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நேற்றைய தினம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துதுறை அமைச்சர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மட்டுமல்லாமல் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி கொண்ட மாநிலமும் தமிழ்நாடு தான்; குறைவான கட்டணத்தில் பேருந்து சேவையை அளிப்பதும் தமிழ்நாடு தான் எனக் கூறினார். மேலும் கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து இரண்டொரு நாளில் தெரிவிப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளதாக அவர் பேட்டியளித்தார்.
மேலும் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்..!
குமரி, நெல்லை உள்பட தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அதிமுக சார்பில் ஒரே அணியாக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு: அண்ணாமலை பேட்டி
ஒன்றுபட்ட அதிமுக அவசியம்!: ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வலியுறுத்தினோம்.. பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
தொடர்மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உழவர்களுக்கு இழப்பீடு வழங்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!
ஆசிரியர் கி.வீரமணியின் சமூகநீதி விழிப்புணர்வு பயணம் வெற்றி பெறட்டும்: வைகோ வாழ்த்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!