SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் ஆப்பிரிக்காவுடன் நாளை முதல் டி20: தினேஷ்கார்த்திக், ரிஷப் பன்ட் இருவருக்கும் வாய்ப்பு

2022-09-27@ 14:43:28

மும்பை: ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாத இறுதியில் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பலப்படுத்தவும், அதற்கான ஆடும் லெவனை தேர்வு செய்வதற்காகவும் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்க முடிவு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இத்தொடரின் மூலம் தினேஷ்கார்த்திக், ரிஷப் பன்ட் பிரச்னை தீர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இருவரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு, தனக்கான இடத்தை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டார். மேலும், பேட்டிங் வரிசையில் எவ்வித பிரச்னைகளும் இல்லை.

பந்துவீச்சில்தான் அக்சர் படேலை தவிர அனைவரும் சொதப்பினார்கள். இந்நிலையில் இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி நாளை திருவனந்தபுரத்தில்  நடைபெறுகிறது. தொடர்ந்து 2வது ஆட்டம் அக்டோபர் 2ல் கவுகாத்தியிலும், 3வது போட்டி அக்டோபர் 4ல் இந்தூரிலும் நடைபெற உள்ளன. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் உலக கோப்பையில் ஆடவுள்ள காம்பினேஷனுடன் தான் இந்திய அணி ஆடும். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் கண்டிப்பாக இடம்பெற்று விளையாடும் ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் இந்த தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.

எனவே அவர்கள் இடத்தில் மட்டும் வேறு வீரர்கள் ஆடுவார்கள். ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள். வழக்கம்போல 3ம் வரிசையில் விராட் கோஹ்லி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஆடுவார்கள். இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா ஆடவில்லை. தீபக் ஹூடாவும் காயம் காரணமாக விலகியுள்ளார். எனவே தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பன்ட் ஆகிய இருவருமே ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள். ஸ்பின்னர்களாக அக்சர் படேல் மற்றும் யஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இவர்கள் மூவருமே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால் இவர்கள் மூவரும் ஆடுவார்கள். தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்: ரோகித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், யஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்