நான்காம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்து அசத்துகிறார்
2022-09-27@ 12:56:36

பந்தலூர் : பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்து அசத்தி வருகிறார்.
பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயின்று வரும் நான்காம் வகுப்பு படித்து வரும் சனாபாத்திமா(9) செவித்திறன் குறைபாடு உள்ளவர். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் படங்களை வரைந்து அசத்தி வருகிறார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ரீத்தா மற்ற ஆசிரியர்களின் படங்களையும் வரைந்துள்ளார்.
இந்த மாணவியின் திறமையை பார்த்து பல்வேறு தரபினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி முத்துரதி என்பவரும் பள்ளி ஆசிரியர்களின் படங்களை வரைந்து அசத்தி வருகிறார். பேச்சு போட்டியில் ஆங்கிலத்தில் பேசி சபரீஸ் என்ற மாணவரும் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். இப்படி தனி திறமைகள் கொண்ட மாணவர்கள் பள்ளியில் பயின்று வருவதாக தலைமை ஆசிரியர் ரீத்தா தெரிவித்தார்.
முதலமைச்சரின் படத்தை ஓவியமாக வரைந்து அசத்தி வரும் சனாபாத்திமாவை பாராட்டி நெலாக்கோட்டை ஊராட்சியின் முன்னாள் கவுன்சிலரும் பந்தலூர் மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளருமான ஞானசேகர் மாணவிக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரம்!: இஸ்திரி, தேநீர் போட்டுக் கொடுத்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய ஆர்.பி.உதயகுமார்..!!
சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்., அதிமுக, தேமுதிக வேட்பாளர் உள்பட 80 வேட்புமனுக்கள் ஏற்பு..!!
உத்திரமேரூர் களியாம்பூண்டி அருகே “நான் வந்துட்டேன்’’... பிறந்த குழந்தை பேசியதா?.. வதந்தியால் திடீர் பரபரப்பு
நாமக்கலில் ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து
பள்ளிப்பட்டு 13வது வார்டில் பிரதான சாலையில் கழிவுநீர் தேக்கம்: நோய்தொற்று பரவும் அபாயம்
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு