செல்போனில் நீண்ட நேரம் செலவிடுவதை பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை
2022-09-27@ 02:10:18

பல்லாவரம்: ஜமீன் பல்லாவரம், அம்பேத்கர் நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் விக்னேஸ்வர் (16), அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர், பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் செல்போனில் வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவதாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், வீட்டில் இருந்த விக்னேஸ்வர் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை, தாய் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த விக்னேஸ்வர் தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பொழிச்சலூரை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஹரிணி (16) தனது பள்ளி ஆசிரியை திட்டியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய் திட்டியதால் பள்ளி மாணவன் விக்னேஸ்வர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சிறையில் உள்ள 60 கைதிகள் விடுதலை
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!