புழல் பகுதியில் கூடுதலாக வருவாய் ஆய்வாளரை நியமிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
2022-09-27@ 02:08:43

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் வருவாய்த்துறை அலுவலகத்துக்கு உட்பட்ட மாதவரம், ரெட்டேரி, லட்சுமிபுரம், புத்தகரம், கல்பாளையம், விநாயகபுரம், சூரப்பட்டு, பாரதிதாசன் நகர், சண்முகபுரம், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், புழல், காவாங்கரை, வடபெரும்பாக்கம், செட்டிமேடு, மஞ்சம்பாக்கம், மாத்தூர் உள்ளிட்ட வருவாய் கிராம மக்கள், பிறப்பு, இறப்பு, வருவாய், சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற ஒரே ஒரு வருவாய்துறை ஆய்வாளர் அலுவலகம் மட்டுமே மாதவரம் மண்டல அலுவலக அருகில் செயல்பட்டு வருகிறது. தினசரி நூற்றுக்கணக்கானோர் சான்றிதழ் விண்ணப்பிக்க இங்கு வருவதால், கூட்ட நெரிசல் காரணமாக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி இல்லையென்றால் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. அதிகாரிகளுக்கும் பணிச் சுமை ஏற்படுகிறது. எனவே, புழல் வருவாய்துறை அலுவலகம் காலியாக உள்ளதால், அந்த இடத்துக்கு ஒரு வருவாய்துறை ஆய்வாளரை கூடுதலாக நியமிக்க சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினர் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மாதவரம் வருவாய்த்துறை அலுவலகம் எல்லை பகுதியில் உள்ள சூரப்பட்டு, பாரதிதாசன் நகர், லட்சுமிபுரம், ரெட்டேரி உள்ளிட்ட பகுதி மக்கள் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் உள்ள மாதவரம் சென்று சான்றிதழ் பெறும் அவல நிலை உள்ளது.
ஏற்கனவே புழல் காந்தி பிரதான சாலையில் செயல்பட்டு வந்த வருவாய்த்துறை அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டு செங்குன்றம் பகுதிக்கு சென்று விட்டது. எனவே காலியாக உள்ள இந்த இடம் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்த பகுதியில் புதிதாக மேலும் ஒரு வருவாய்த்துறை அலுவலரை நியமித்து பொதுமக்கள் பிரச்னையை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
மேலும் செய்திகள்
சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
‘சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது: காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!