பொங்கலுக்கு அஜித், விஜய் படங்கள் போட்டி
2022-09-27@ 01:54:35

சென்னை: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித், விஜய் படங்கள் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாவது அரிதாக நடக்கும் விஷயமாகும். அதுபோல் நடக்கும்போதெல்லாம் தியேட்டர்களில் திருவிழா கூட்டம் போல களைகட்டும். ரஜினி, கமல் படங்கள் இதுபோல் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. அப்போது இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும். அதேபோல், அஜித், விஜய் படங்களும் இதுபோல் ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளன. அப்போதும் இந்த இரண்டு ஹீரோக்களுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்படும். கடைசியாக 2014ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா படங்கள் திரைக்கு வந்தன.
அப்போதும் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் விஜய்யின் ஜில்லா படத்தை அஜித்தின் வீரம் முந்தியது. இதையடுத்து வீரம் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆனது. இப்போது இந்தியிலும் சல்மான் கான் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித், விஜய் ஒரே நாளில் மோத உள்ளனர். தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு பட டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். இதில் ராஷ்மிகா, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், சங்கீதா உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது.
அஜித் நடிப்பில் வினோத் இயக்கும் படம் துணிவு. இதில் மஞ்சு வாரியர், சஞ்சய் தத், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படமும் பொங்கலுக்கு ரிலீசாகும் என தயாரிப்பாளரும் வினியோகஸ்தருமான நடிகர் ஆர்.கே.சுரேஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் ஒரே நாளில் அஜித், விஜய் படங்கள் மோதுவது உறுதியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!