சில்லி பாயின்ட்...
2022-09-27@ 01:40:19

* கோலாலம்பூரில் நடைபெற உள்ள உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் (அக். 4-8) விளையாட, இந்தியாவின் பங்கஜ் அத்வானி, சவுரவ் கோத்தாரி, துருவ் சித்வலா ஆகியோருக்கு நேரடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில், தேசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் வாள்வீச்சில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தமிழக வீராங்கனை பவானி தேவி தெரிவித்துள்ளார்.
* செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் லேவர் கோப்பை தொடரில் ஐரோப்பிய அணிக்காக விளையாடினார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவரால் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. இது குறித்து கூறுகையில், ‘தற்போது மணிக்கட்டு பகுதியில் சிறு பிரச்னை உள்ளது. அதனால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் சிரமப்பட்டேன். சில தொடர்களில் விளையாடாமல் இருந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம். விரைவில் முழு உடல்தகுதி பெற முடியும் என நம்புகிறேன். ஆண்டு இறுதி ஏடிபி பைனல்ஸ் தொடரில் களமிறங்குவதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றார்.
* அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட், ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் நட்சத்திர வீரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் வாஹ் தெரிவித்துள்ளனர். இந்திய அணியுடன் நடந்த தொடரில், முதல் 2 போட்டிகளில் 18 ரன் மற்றும் 2 ரன் மட்டுமே எடுத்த டேவிட், 3வது டி20ல் அதிரடியாக விளையாடி 27 பந்தில் 54 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது.
Tags:
சில்லி பாயின்ட்மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.! 6 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஆர்ச்சர்
மகளிர் டி 20 இறுதி போட்டி; இந்தியா தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
பறந்து வந்த பந்தை பாய்ந்து பிடித்த சூர்யகுமார்
சுப்மன் கில் தில்லான ஆட்டத்தால் நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா; அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!