மன்மோகன் சிங் பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து
2022-09-27@ 00:58:59

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத் தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார், இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவர் சாதித்தார். அவர் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வாய்ஜாலம் காட்டும் ஒன்றிய அரசு பட்ஜெட்: தொல். திருமாவளவன் கண்டனம்
மாங்காட்டில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்
கனமழை காரணமாக நெற்பயிர்கள் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!