அமைச்சர் எ.வ.வேலுவுடன் கொரியாவின் சிவில் இன்ஜினியரிங் ஆலோசனை குழுவினர் சந்திப்பு
2022-09-27@ 00:58:27

சென்னை: கொரிய நாட்டின் முன்னணி சிவில் இன்ஜினியரிங் ஆலோசனை குழுவினர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். கொரிய நாட்டின் முன்னணி சிவில் இன்ஜினியரிங் ஆலோசனை கழக குழுவினரின் ஜயாங் இம் தலைமையில், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து “பொறியியல் சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக செயல்படுத்துவது’’தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
தற்போது, கொரியாவில் நடைமுறையில் உள்ள பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன்கூடிய, விரைவாகவும், எளிதாகவும் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், இதுவரை பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், தமிழ்நாட்டில் தொடங்கவிருக்கும் பல்வேறு சிவில் இன்ஜினியரிங் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. விவாதத்தின்போது, ஜயாங் இம், கொரிய இன்ஜினியரிங் ஆலோசனை கழகம், ஜயாங் ஜியோங் சிணிளி, சங்மோ ஜெனரல் கன்ஸ்ட்ரக்ஷன், கொரியா, ஜங் சூ சாங் சிணிளி, டேடோ என்டெக், கொரியா, முகமது சஹீத், அபுதாபி, முகமது ரஃபி, அபுதாபி, ராஜ்குமார், சென்னை, இந்தியா, மராட்டி ரவி, ஹைதராபாத், இந்தியா, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:
Minister AV Velu Korea Civil Engineering Consultative Committee Meeting அமைச்சர் எ.வ.வேலு கொரியா சிவில் இன்ஜினியரிங் ஆலோசனை குழு சந்திப்புமேலும் செய்திகள்
ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்: அதானி குழும நிறுவங்களின் பங்குகள் விலை வீழ்ச்சி
2023 ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்: டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம்
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் மூலமாக வேலூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநகர பேருந்தை நடத்துனர்கள் இயக்கக் கூடாது: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளர் சுற்றறிக்கை
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!