ரூ.814 கோடி கருப்பு பண விவகாரத்தில் அனில் அம்பானி மீது நடவடிக்கைக்கு தடை
2022-09-27@ 00:40:27

மும்பை: வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 8ம் தேதி ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், அனில் அம்பானி வேண்டும் என்றே ஸ்விஸ் வங்கியில் 2 வங்கி கணக்கில் உள்ள ரூ.814 கோடி பணம் குறித்து வருமான வரித்துறையிடம் மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர். வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் கங்காபுர்வாலா, ஆர்.என். லத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது அனில் அம்பானி தரப்பில் ஆஜரான வக்கீல் ரபீக் தாதா, ‘‘ அனில் அம்பானிக்கு எதிரான குறிப்பிட்ட சட்டப்பிரிவு 2015ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனைகள் 2006-07 மற்றும் 2010-11 ஆண்டுகளில் நடந்தவை. எனவே அந்த சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது’’ என்றார். இதைத் தொடர்ந்து, விசாரணையை நவம்பர் 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். மேலும் அதுவரை அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதித்தனர்.
Tags:
Rs.814 crore black money issue Anil Ambani banned ரூ.814 கோடி கருப்பு பண விவகார அனில் அம்பானி தடைமேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!