குலாம் நபி அறிவிப்பு புதிய கட்சி பெயர் ‘ஜனநாயக ஆசாத்’
2022-09-27@ 00:32:56

ஜம்மு: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ‘ஜனநாய ஆசாத்’ என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று தொடங்கினார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், திடீரென ஆகஸ்ட் 26ம் தேதி கட்சியில் இருந்து விலகினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்பட 20க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். இந்நிலையில் குலாம் நபி ஆசாத் நேற்று தனது புதிய கட்சியை தொடங்கினார். ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ என்று தனது கட்சிக்கு அவர் பெயர் வைத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத், ‘‘எனது கட்சியின் பெயர், ஜனநாயகம், பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரத்தை குறிக்கின்றது. மகாத்மா காந்தியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது எங்களது கட்சியின் கொள்கை. இது வேறு எந்த கட்சிக்கும் போட்டி கிடையாது. ஜம்முவில் அமைதி மற்றும் இயல்பு நிலையை வலுப்படுத்துவதில் எனது கட்சி கவனம் செலுத்தும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஊழல் குற்றச்சாட்டுகளால் பாஜவுக்கு பின்னடைவு கர்நாடக தேர்தலில் காங்கிரசின் கை ஓங்குமா
சொல்லிட்டாங்க...
நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : நாடாளுமன்றம் 12வது நாளாக முடங்கியது: மக்களவை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!!
சபாநாயகருடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை..!
கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் : ராகுலின் வயநாடு தொகுதிக்கும் இன்று தேர்தல் அறிவிப்பா?
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!