சென்னையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வரைவு செயல்திட்டம் தயாரிக்க பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிப்பு..!!
2022-09-26@ 15:09:10

சென்னையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வரைவு செயல்திட்டம் தயாரிக்க பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஐந்தாவது பெருநகரமாக உள்ளது. சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையிலும் காலநிலைக்கான செயல்திட்டத்தை தயாரிக்க C40 நகரங்களுக்கான கூட்டமைப்பில் இணைந்துள்ளது.
C40 நகரங்களுக்கான கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் காலநிலை செயல்திட்டத்தை தயாரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு செயல் திட்டம் குறித்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு செயல் திட்டப் பரிந்துரைகள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in <http://www.chennaicorporation.gov.in> என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை chennaiclimateactionplan@gmail.com <mailto:chennaiclimateactionplan@gmail.com> என்ற மின்னஞ்சல் முகவரியில் செப்.26க்குள் தெரிவிக்கும்படி வரைவு செயல்திட்டப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இந்த வரைவு செயல்திட்டப் பரிந்துரைகளின் தமிழ்ப்பதிவு இணையதளத்தில் செப்.27 அன்று பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை செப்.26 வரை தெரிவிக்கும் வகையில் ஒருமாதக் காலத்திற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தலைமறைவு குற்றவாளி சிக்கினார்
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 2 சுங்க சாவடிகள் அமைக்க முடிவு
மணலி சடையங்குப்பம் சாலையில் நிறுத்தப்படும் டிரைலர் லாரிகளால் அடிக்கடி விபத்து: பொதுமக்கள் அவதி
ராஜிவ்காந்தி சாலையில் ஓடும் காரில் தீ விபத்து: போக்குவரத்து பாதிப்பு
மாத்தூர் எம்எம்டிஏவில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: ஏராளமானோர் பங்கேற்பு
தொடர் கைவரிசை: பிரபல பைக் திருடன் கைது
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!