SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய உணவு கழகத்தில் 108 மேலாளர் இடங்கள்

2022-09-26@ 12:30:38

இந்திய உணவு கழகத்தில் 108 மேனேஜ்மென்ட் டிரெய்னி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

1.     Manager (General): 14 இடங்கள்.
2.     Manager (Depot): 15 இடங்கள்.
3.     Manager (Movement): 6 இடங்கள்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ் படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4.     Manager (Accounts): 35 இடங்கள்.

தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ் பட்டம் அல்லது நிதி பாடத்தில் எம்பிஏ.

5.     Manager: (Technical): 28 இடங்கள்.

தகுதி: பிஎஸ்சி வேளாண்மை/பிஎஸ்சி உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்/பி.இ., வேளாண்மை இன்ஜினியரிங்/ பி.இ., பயோ டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம்.

6.     Manager: (Civil Engineering): 6 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,

7.     Manager: (Electrical/Mechanical): 1 இடம்.

8.     Manager: (Hindi): 3 இடங்கள். தகுதி: ஏதாவதொரு முதுநிலைப் பட்டம். இளநிலை மற்றும் முதுநிலை பட்டத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் 5 வருட பணி அனுபவம்.

அனைத்து பணிகளுக்கும் வயது: 28க்குள். சம்பளம்: ரூ.40,000- 1,40,000. கட்டணம்: ரூ.800/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. www.fci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.9.2022.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்