சண்டிகரில் உள்ள விமான நிலையத்துக்கு பகத் சிங்கின் பெயர்: பிரதமர் அறிவிப்பு
2022-09-26@ 02:44:48

புதுடெல்லி: ‘சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட தியாகி பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும்,’ என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி வார ஞாயிற்றுக்கிழமையில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பேசி வருகிறார். அதன்படி, நேற்று அவர் ஆற்றிய உரையில் வருமாறு: பருவநிலை மாற்றங்கள், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் குப்பைகள் இருப்பது கவலை அளிக்கிறது. இந்த சவால்களை சமாளிக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வது நமது பொறுப்பாகும். பாஜ.வின் சித்தாந்தவாதியான தீன் தயாள் உபாத்யாயா, சிறந்த ஆழ்ந்த சிந்தனையாளர்.
நாட்டின் சிறந்த குடிமகன். ‘அமிர்த மஹோத்சவ்’ கொண்டாட்டத்தின் ஒரு முக்கியமான நாளாக செப். 28ம் தேதி பகத் சிங்கின் பிறந்தநாள் வருகிறது.
இதை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் வகையில், பஞ்சாப்பில் உள்ள சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட தியாகி பகத் சிங்கின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பஞ்சாப் அரசு நன்றி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இறுதியாக, எங்களின் நீண்ட கால முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங்கின் பெயரை சூட்டும் பிரதமர் மோடிக்கு, பஞ்சாபின் ஒட்டு மொத்த மக்களின் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்,’ என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
வாணி ஜெயராம் மறைவு இசை உலகிற்கு பெரும் இழப்பாகும்: பிரதமர் மோடி இரங்கல்
தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு லட்டு கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்
சேலையால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
அடிதடி வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி தாய்க்கு செக்ஸ் டார்ச்சர்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!