பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் ஆகியோர் கைது; கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளாக இருக்கின்றனர்: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி
2022-09-25@ 19:52:40

கோவை: பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி மற்றும் நுண்ணறிவு பிரிவு விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளாக இருக்கின்றனர் என கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
கோவையில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பாஜக நிர்வாகி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்வத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்; சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரை கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பில் உள்ளனர்.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். பல்வேறு மத அமைப்பினரும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.சிசிடிவி மற்றும் நுண்ணறிவு பிரிவு விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடு அல்லாத பொருட்கள் மீது தீவைத்து தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!