3 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை கர்நாடகா விரைகிறார்
2022-09-25@ 17:25:30

பெங்களூர்: ஜனாதிபதி திரௌபதி முர்மு கர்நாடகாவில் 3 நாள் பயணம் மேற்கொள்கிறார். நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க உள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரௌபதி முர்மு. ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்ட பின் முதல் முறையாக கர்நாடகா செல்கிறார்.
கர்நாடக வரும் அவர் முதலில் மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் தசரா விழாவை அவர் தொடங்கி வைக்கிறார். அதே நாளில், ஹூப்ளியில் ஹூப்ளி -தர்வாட் முனிசிபல் கார்ப்பரேஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பூர சன்மனா' என்ற பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். தொடர்ந்து தனது பயணத்தின் 2-வது நாளில் தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.
பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தி வசதியை திறந்து வைக்கிறார். அதே நாளில், செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழாவில் பங்கேற்கிறார். மேலும் பெங்களூருவில் கர்நாடக அரசு வழங்கும் குடிமை வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். ஜனாதிபதி திரௌபதி முர்மு கர்நாடகா பயணத்தை முடித்து கொண்டு செப்டம்பர் 28-ம் தேதி புதுடெல்லி திரும்புகிறார்.
மேலும் செய்திகள்
கேரள பட்ஜெட் இன்று தாக்கல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அதானி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைப்பு
இடைத்தேர்தலை அறிவிக்க 6 மாதம் அவகாசம் இருந்த போதிலும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அவசர அவசரமாக அறிவித்தது ஏன்?: அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
பிபிசி ஆவணப்பட வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பொதுக்குழு தொடர்பான ஆவணங்களை ஏற்குமாறு தேர்தல் ஆணையத்திடம் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்
அதானி விவகாரம் குறித்து பிப்ரவரி 6ம் தேதி நாடு முழுவதும் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!