5 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இன்று சோனியாவை சந்திக்கும் லாலு, நிதிஷ்: மெகா கூட்டணி அமைக்க ஆலோசனை
2022-09-25@ 14:49:32

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக சோனியா காந்தியை இன்று மாலை டெல்லியில் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர் சந்தித்து, மெகா கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய அளவில் மெகா கூட்டணியை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பீகாரில் ஆளும் கூட்டணியின் இரண்டு முக்கிய தலைவர்களான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் ஆகியோர் இன்று மாலை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், மேற்கண்ட மூன்று முக்கிய தலைவர்களும் மீண்டும் சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த சந்திப்பின் போது, தேசிய அளவில் மெகா கூட்டணி அமைப்பது உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று லாலு பிரசாத் யாதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு பைத்தியக்காரர்; புத்தி இல்லாதவர்’ என் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
இபிஎஸ் போல் பாஜவை தவிர்த்த ஓபிஎஸ்‘தேசிய ஜனநாய கூட்டணி’ என பேனர்: மானத்தை வாங்குறாங்களே என்று குமுறும் நிர்வாகிகள், தொண்டர்கள்
ஓபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர் உட்பட 16 பேர் வேட்பு மனு தாக்கல்
பால் விலை உயர்வை கைவிட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!