நன்னடத்தை விதிமீறல் பிரபல ரவுடிக்கு 198 நாள் சிறை
2022-09-25@ 00:53:51

தண்டையார்பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், காக்களூரை சேர்ந்தவர் விஜயகுமார் (எ) ரேடியோ விஜி (41), பிரபல ரவுடியான இவர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 9ம்தேதி தான் திருந்தி வாழப்போவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவுன்குமார் ரெட்டி முன்பு விஜயகுமார் ஆஜராகி நன்னடத்தை பிரமாணப்பத்திரம் எழுதிக் கொடுத்தார். இந்நிலையில், அதை மீறி கடந்த 3ம்தேதி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் ரவுடி விஜயகுமாரை கைது செய்தார். மேலும் நன்னடத்தை விதியை மீறி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக விஜயகுமாரை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டியிடம் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினார். இதில், 167 நாட்கள் திருந்தி வாழ்ந்த நாட்கள் போக 198 நாள் சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, விஜயகுமாரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:
Probation violation famous rowdy 198 days in jail நன்னடத்தை விதிமீறல் பிரபல ரவுடி 198 நாள் சிறைமேலும் செய்திகள்
உதவி செய்ய சென்ற காவலருக்கு கத்திக்குத்து
ரூ.5 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் சிக்கினார்; இருவர் தலைமறைவு
ரூ.4 ஆயிரம் லஞ்சம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் கைது
தொழிலாளி மகள் அபகரிப்பு அதிமுக நிர்வாகி கைது
குடிநீர் தொட்டியில் நாய் சடலம் வீசிய மனநிலை பாதித்த வாலிபர் கைது
பாலியல் தொந்தரவு மாணவி தற்கொலை மாணவர்கள் கைது
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!