மாணவிக்கு பாலியல் தொல்லை பேக்கரி ஊழியர் கைது
2022-09-25@ 00:52:38

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16ம்தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, அதே பகுதியில் உள்ள பேக்கரியில் சிறுமி குளிர்பானம் வாங்கியுள்ளார். அப்போது, சிறுமிக்கு கடை ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லும்போது, அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் உதவியுடன் குழந்தைகள் அவசர உதவி எண் 1098க்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். குழந்தைகள் உதவி கரம் குழுவினர் சிறுமியின் பெற்றோரை வரவழைத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பிறகு மகளிர் போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரி ஊழியர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரகு (32) என்பவரை போக்சோவில் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் அமெரிக்க பெண் பலாத்காரம்
திருமண மண்டபத்தில் நகை திருடிய பெண் கைது
ஏட்டு மனைவியுடன் தவறான உறவு இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலை: 8 பேர் கைது
ரூ.2 கோடி மதிப்பு நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்த முதியவர் அதிரடி கைது
ரூ.24 லட்சம் திருடிய காவலாளி கைது
டிவிட்டரில் நடிகை காயத்ரி ரகுராம் குறித்து ஆபாச பதிவு ராணிப்பேட்டை மாஜி பாஜ மாவட்ட நிர்வாகி மீது வழக்கு: கைது செய்ய சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தீவிரம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!