உ.பி சட்டப்பேரவையில் செல்போனில் சீட்டு விளையாட்டு, குட்கா போடும் பாஜ எம்எல்ஏ.க்கள்
2022-09-25@ 00:45:18

புதுடெல்லி: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்குள் பாஜ எம்எல்ஏ.க்கள் குட்காவை சாப்பிடுவதும், செல்போனில் சீட்டு விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் எம்எல்ஏ.க்களை யாரும் சோதனையிடுவது கிடையாது. எந்த பொருட்கள் வேண்டுமென்றாலும் அவர்கள் கொண்டு செல்லலாம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில், பாஜ எம்எல்ஏ ரவி சர்மா என்பவர் சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது குட்காவை எடுத்து சாப்பிடுகிறார். இவரின் இந்த செயலை சட்டப்பேரவைக்கு உள்ளேயே ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் இன்னொரு எம்எல்ஏ தனது செல்போனில் சீட்டு விளையாடுகிறார். இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ள சமாஜ்வாடி கட்சி, இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் அகிலேஷ் டிவிட்டரில் பதிவிடுகையில், ‘சட்டப்பேரவைக்குள் எம்எல்ஏக்கள் குட்கா போடுகின்றனர். செல் போனில் சீட்டு விளையாடுகின்றனர். 2 பேரும் பாஜ.வை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. இது மக்களை அவமானப்படுத்துவதாகும். இந்த வீடியோவை பதிவு செய்து ஷேர் செய்த பாஜ எம்எல்ஏக்களுக்கு நன்றி. இந்த எம்எல்ஏக்கள் மீது முதல்வர் யோகி நடவடிக்கை எடுப்பாரா?’ என கேட்டுள்ளார்.
Tags:
UP Legislature on cell phone card game Gutka BJP MLAs. உ.பி சட்டப்பேரவை செல்போனில் சீட்டு விளையாட்டு குட்கா பாஜ எம்எல்ஏ.க்கள்மேலும் செய்திகள்
புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு
old polluted மாற்றம் என்று கூறுவதற்கு பதில் old political மாற்றம் என்று நிதியமைச்சர் கூறியதால் நாடாளுமன்றத்தில் சிரிப்பலை
நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு; புதிய விமான நிலையங்கள் அதானிக்கா என எதிர்க்கட்சிகள் முழக்கம்
3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
நலிந்தநிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலை நிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!