கேரளாவில் மாஸ்க் அணிவது கட்டாயம்
2022-09-25@ 00:44:02

திருவனந்தபுரம்: கேரளாவில் முக கவசத்தை கட்டாயமாக்கும் அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் பெரும்பாலும் பொது இடங்களில் யாரும் முககவசம் அணிவதில்லை. இந்நிலையில் கேரளாவில் பொது இடங்களில் முக கவசத்தை கட்டாயமாக்கும் அவசர சட்டத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் அளித்தால் இந்த அவசர சட்டம் உடனடியாக கேரளாவில் அமலுக்கு வரும். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு எதிராக போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும் செய்திகள்
பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை கண்டித்து 2-வது நாளாக கொச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
பிரதமரால் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியவில்லையா?: அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?.. காங். தலைவர் கடும் தாக்கு..!!
திருமணமான சில மாதங்களில் சண்டை கணவர் தாக்கியதில் நடிகையின் முகம் வீங்கியது: நகை, பணத்தை அள்ளிச் சென்றதாக புகார்
ஓடும் பைக்கில் ‘ரொமான்ஸ்’: காதல் ஜோடி மீது போலீஸ் வழக்கு
ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!