தனிநபர், நிறுவனங்களுக்கு சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது: கவர்னர் அறிவிப்பு
2022-09-25@ 00:33:15

சென்னை தமிழக கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தில் ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய துறைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தனிநபர்கள், நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காகவும், இத்துறையில் மற்றவர்களை ஊக்குவிப்பதற்காகவும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கவேண்டுமென்று முடிவுசெய்துள்ளார். இதுபோன்ற விருதுகளை ஆளுநர் மாளிகை வரலாற்றில் வழங்குவது இதுவே முதன்முறையாகும். செப்டம்பர் 24, 2022 முதல் ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சேவைகளை ஆற்றியுள்ள தகுதியுள்ள நிறுவனங்கள், நபர்களிடமிருந்து பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. இந்த 2 விருதுகளும் சான்றிதழுடன் தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். பரிந்துரைகள் அனுப்ப வேண்டிய முகவரி: ஆளுநரின் துணைச் செயலாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை , கிண்டி, சென்னை - 600 022.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 30.10.2022, மாலை 5 மணி. விருதுகள் 26, ஜனவரி 2023 அன்று ஆளுநரால் வழங்கப்படும். பரிந்துரைக்கப்படும் நபர், மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள் அல்லது ஓய்வு பெற்ற அரசு செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், இந்திய அரசு, தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பத்மஸ்ரீ விருது பெற்றவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டு அத்துறையில் பணியாற்றியிருக்க வேண்டும். விண்ணப்பங்களை awardsrajbhavantamilnadu @gmail.com, mail to:awardsrajbhavantamilnadu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Tags:
Individual Institutional Community Service Environmental Protection Award Governor தனிநபர் நிறுவன சமூக சேவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது கவர்னர்மேலும் செய்திகள்
பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!