சென்னையில் இருந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா: அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்
2022-09-25@ 00:32:43

சென்னை: சென்னையில் இருந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக சட்டப் பேரவையில் அறிவித்தபடி, ஆடி மாதம் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிக சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிக சுற்றுலாவினை நேற்று அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அறநிலைய துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், சுற்றுலா துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர், அஷ்டலெட்சுமி கோயில், திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம், ஸ்தல சயன பெருமாள் கோயில், சிங்கப்பெருமாள் கோயில், பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை, நீர்வண்ண பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கும், 2வது திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில், திருநீர்மலை, நீர்வண்ண பெருமாள் கோயில், திருமுல்லைவாயில், பொன்சாமி பெருமாள் கோயில், திருவள்ளூர், வைத்திய வீர ராகவபெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி, வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கும் பக்தர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த 2 திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, கோயில் பிரசாதம், கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.
Tags:
Chennai Puratasi Matha Spiritual Tourism Ministers Shekharbabu Madivendan சென்னை புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா அமைச்சர்கள் சேகர்பாபு மதிவேந்தன்மேலும் செய்திகள்
புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்: அதானி குழும நிறுவங்களின் பங்குகள் விலை வீழ்ச்சி
2023 ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்: டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம்
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் மூலமாக வேலூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநகர பேருந்தை நடத்துனர்கள் இயக்கக் கூடாது: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளர் சுற்றறிக்கை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!