கோயில் பொது அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க அறநிலைய துறை உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை: ஐகோர்ட் உத்தரவு
2022-09-25@ 00:18:38

சென்னை: அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை முகப்பேரில் உள்ள சந்தான சீனிவாச பெருமாள் கோயிலை நிர்வகிக்கவும், பிற அறப்பணிகளை மேற்கொள்ளவும் ஸ்ரீசந்தான சீனிவாச பெருமாள் பொது அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. கோயிலை நிர்வகிப்பதால் அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்து தக்காரை நியமித்து இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் 2015ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் 2015ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார்.
அப்போது, கோயில் தரப்பு வழக்கறிஞர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டப்படி ஒரு அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கும், துணை ஆணையருக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது. உதவி ஆணையருக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர் அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் அறக்கட்டளை மத நிறுவனமா, இல்லையா என்று விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தி நான்கு மாதங்களில் அறநிலையத்துறை இணை ஆணையர் கண்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Tags:
TEMPLE PUBLIC TRUST AS RELIGIOUS INSTITUTION CHARITY DEPARTMENT ASSISTANT COMMISSIONER NO AUTHORITY ICOURT கோயில் பொது அறக்கட்டளை மத நிறுவனமாக அறநிலைய துறை உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை ஐகோர்ட்மேலும் செய்திகள்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
பொதுமக்கள் சானிட்டரி நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!