நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இலங்கையில் இருந்து கஞ்சா ஏற்றுமதி: மருத்துவத்துறை அமைச்சர் தகவல்
2022-09-24@ 21:54:19

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அன்னிய முதலீட்டை ஏற்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலேய படையெடுப்புக்கு முன்னர் இலங்கையில் இருந்து போதை பொருளான கஞ்சா ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கஞ்சா ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் கஞ்சா ஏற்றுமதிக்கு இலங்கை அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
இதுகுறித்து இலங்கை மருத்துவ துறை அமைச்சர் சிசிர ஜயக்கொடி கூறுகையில்:
‘கஞ்சாவை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகளவு வருமானத்தை ஈட்ட முடியும். கஞ்சா ஏற்றுமதியை சட்டமாக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தங்கள் செய்யப்படும். வரும் 5ம் தேதிக்குள் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும். உள்நாட்டு மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் மூலம் இலங்கையினால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்ட முடியும்.
எனவே கஞ்சா ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. உலகளவிலான கஞ்சா சந்தையில் நான்கு டிரில்லியன் அளவிற்கு கஞ்சாவிற்கான தேவை இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதனால் அந்த வாய்ப்பை இலங்கை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது’ என்றார்.
மேலும் செய்திகள்
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
சூரிய குடும்பத்தில் வியாழனில் தான் அதிக நிலாக்கள்: புதிதாக 12 கண்டுபிடித்ததால் 92ஆக உயர்வு
உளவு பார்க்க சீனா அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் பலூனைப் பார்த்து பதறும் அமெரிக்கா: சுட்டு வீழ்த்தினால் வெடித்து சிதறுமோ என அச்சம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!