புனித நகரமான மதீனாவில் புதிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு: சவுதி ஆய்வு மையம் தகவல்
2022-09-24@ 18:57:54

மதீனா: புனித நகரமான மதீனாவில் அதிக அளவில் தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் 5 ஆயிரத்து 300 சுரங்கங்கள் உள்ளன. தங்கம், செம்பு உள்ளிட்ட உலோகங்கள், உலோகம் அல்லாதவை, இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்களும் சுரங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் சவுதி அரேபியா அரசின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மதீனாவின் அருகாமையில் உள்ள அபா-அல்-ரஹா எல்லையில் தங்கம் மற்றும் செம்பு கற்களால் ஆன பெரிய சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல், அல் மடிக், அல் ஃபரா, மதீனா ஆகிய இடங்களிலும் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய சுரங்கங்கள் கண்டுபிடிப்பால் சவுதி அரேபியா மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கவர முடியும். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
3,900 பேர் பணி நீக்கம் ஐபிஎம் நிறுவனம் அறிவிப்பு
உக்ரைனுக்கு மீண்டும் அமெரிக்கா உதவி: 31 அதிநவீன பீரங்கிகளை அனுப்புவதாக அறிவிப்பு
இம்ரான்கான் பாதுகாப்பு வாபஸ்
ஆண்டுக்கு ரூ.16 கோடி செலவிட்டு இளைஞனாக மாற முயலும் 45 வயது தொழிலதிபர்
2 ஆண்டுக்கு பின் தடை நீங்கியது பேஸ்புக்கில் மீண்டும் டிரம்ப்
உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கருத்து
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!