அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2022-09-24@ 17:30:41

சென்னை: அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அகவிலைப்படி வழங்கியது குறித்து நவம்பர் 25-ல் அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. நிதி நெருக்கடியை காரணமாக் கூறும் அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவிப்பது எப்படி என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அகவிலைப்படி உயர்வு விலகியது குறித்து நவ.25-ல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க 2015-ல் ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், 4 முறை அகவிலைப்படி உயர்த்தியபோதும், ஓய்வூதியதாரர், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தரவில்லை என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அகவிலைப்படி வழங்க மறுத்ததால் 86,000 ஓய்வூதியதாரர் - 20,000 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பணியில் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் நிலையில் தங்களுக்கு வழங்க மறுப்பது பாரபட்சமானது எனவும் மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடியால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை எனவும், போக்குவரத்து துறையில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளதால் அகவிலைப்படி தர ரூ.81 கோடி செலவாகும் எனவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அகவிலைப்படி உயர்வு வழங்கியது குறித்து நவம்பர் 25-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Tags:
அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நவம்பர் அகவிலைப்படியை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுமேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!