சர்வதேச டி20 போட்டி: அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரோகித் ஷர்மா..!
2022-09-24@ 14:21:36

நாக்பூர்: சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரோகித் ஷர்மா உள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 2வது டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 8 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் குவித்தது.
பின்ச் 31 (15பந்து) ரன், கீப்பர் வாடே 43 (20பந்து, அவுட் இல்லை) ரன்கள் எடுத்தனர். அக்ஷார் படேல் 2, பும்ரா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் எடுத்து அபாரமாக வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்த போட்டியில் முதல் சிக்சர் அடித்ததன் மூலம் கேப்டன் ரோகித் ஷர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக 172 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் உடன் முதல் இடத்தில் இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் ரோகித் ஷர்மா 4 சிக்ஸர்கள் அடித்தார்.
இதனால் சர்வதேச டி20 போட்டிகளில் அவருடை சிக்ஸர்கள் எண்ணிக்கை 176 ஆக உள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் சாதனையை முறியடித்து சர்வதேச டி20களில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றுள்ளார்.
மேலும் செய்திகள்
ரஞ்சி அரையிறுதி இன்று தொடக்கம் முன்னாள் சாம்பியன்கள் கர்நாடகா - சவுராஷ்டிரா மோதல்
சர்வதேச கிரிக்கெட் பிஞ்ச் ஓய்வு
சில்லி பாயின்ட்...
நாக்பூரில் நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம்; 4 ஸ்பின்னர்களுடன் களம் இறங்க இந்தியா திட்டம்
கில் தொடக்க வீரராக இருக்க வேண்டும்: ஹர்பஜன்சிங் பேட்டி
இந்தியாவை வென்றால் ஆஷஸை விட பெரிதாக இருக்கும்: ஸ்டீவ் ஸ்மித் பேட்டி
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!