அவளூர் ஏரியில் இருந்து மீன்கள் வெளியேறாமல் தடுக்க மக்கிலியன் கால்வாயில் வேலி
2022-09-24@ 11:08:53

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் உள்ள மீன்கள் வெளியேறாமல் இருக்க மக்கிலியன் கால்வாயில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலாற்றில் இருபக்கமும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. எனவே, பாலாற்றில் இருந்து வரும் தண்ணீரை ஆங்காங்கே உள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியும் நிரம்ப தொடங்கி உள்ளது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளும் நிரம்பி வழிய தொடங்கி உள்ளது.
இந்நிலையில், காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் ஏரிக்கு கடந்த வாரங்களாக மக்கிலியன் கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏரியில் உள்ள மீன்கள் கால்வாய் மூலம் வெளியேறுவதாக கூறப்படுகிறது. எனவே, களத்தூர் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் அருகே இரும்பு வலை, முள் போன்றவைகளை வைத்து தடுப்பு வேலி அமைத்துள்ளனர். மேலும், பாதுகாப்பிற்காக ஒருவர் நியமிக்கப்பட்டு, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏரிக்கு வரும் தண்ணீர் குறைவாகவே செல்கிறது.
மேலும் செய்திகள்
வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் அருகே ரூ.11 கோடியில் ஜவ்வாதுமலை-புதூர்நாடு சாலை பணி: மார்ச் இறுதிக்குள் முடியும் என கோட்ட பொறியாளர் தகவல்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!