SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த ஏரியாவுக்கு நான் தான் ரவுடி என்று ரகளை நள்ளிரவில் 3 வாலிபர்களுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு: ரவுடி கைது

2022-09-24@ 02:28:15

தண்டையார்பேட்டை: ராயப்பேட்டையில் இந்த ஏரியாவுக்கு நான்தான் பெரிய ரவுடி என கஞ்சா போதையில் நள்ளிரவில் ரகளை செய்து, 3 வாலிபர்களை ஓட ஓட அரிவாளால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (34), விக்னேஷ் (19), திருவல்லிக்கேணி துலுக்கானம் தோட்டம் டாக்டர் நடேசன் சாலையை சேர்ந்த சரவணன் (19) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 11.15 மணிக்கு நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது, கஞ்சா போதையில் மொபட்டில் அங்கு வந்த கிருஷ்ணாம்பேட்டை பி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த ரவுடி கார்த்திக் (எ) முதலை கார்த்திக் (27) என்பவர், ‘‘ஏய் யார் நீங்கள். இந்த நேரத்தில் எதற்கு இங்கு நின்று பேசுகிறீர்கள். கிளம்புங்கள்,’’ என கூறியுள்ளார்.

அதற்கு அந்த மூவரும், ‘‘நாங்கள் இந்த ஏரியாதான். நாங்கள் இங்கு நின்று பேசுவதால், உனக்கு என்ன பிரச்னை,’’ என்று கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ரவுடி கார்த்திக், ‘நான்தான் இந்த ஏரியாவுக்கு பெரிய ரவுடி. என்னையே எதிர்த்து பேசுவீர்களா,’’ என்று கூறி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெங்கடேஷ், விக்னேஷ், சரவணன் ஆகியோரை சரமாரியாக வெட்டி தொடங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத 3 பேரும், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அவர்களை ஓட ஓட விரட்டி சென்று ரவுடி கார்த்திக் வெட்டியுள்ளார். அந்த 3 பேரும் வெட்டு காயங்களுடன் ரவுடியிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இருந்தாலும் போதை தெளியாததால் ரவுடி கார்த்திக் அதே பகுதியில் சாலையில் அங்கும் இங்கும் அரிவாளுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

தகவலறிந்த ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் போலீசாருடன் சம்பவம் இடத்திற்கு சென்று கஞ்சா போதையில் அரிவாளுடன் இருந்த ரவுடி கார்த்திக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே, ரவுடியால் படுகாயமடைந்த வெங்கடேஷ், விக்னேஷ், சரவணன் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், ரவுடி கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரவுடி கார்த்திக் மீது வழிப்பறி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்