மூலகொத்தலம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு
2022-09-24@ 00:27:42

தண்டையார்பேட்டை: ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலகொத்தலம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் மழைநீர் கால்வாய்கள், நீர்நிலைகள், நீர்வழிக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53வது வார்டுக்கு உட்பட்ட மூலகொத்தலம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் ஆணையர் சிவ்தாஸ் மீனா, அரசு முதன்மை செயலாளர் மணிவாசன் அரசு முதன்மை செயலாளர் ஆணையர் ககன்தீப் சிங்பேடி, மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லேஷ் குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்து, ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணி மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினர்.
ஆய்வின்போது, மண்டலம் குழு தலைவர் ராமுலு, 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், பகுதி வட்ட செயலாளர் கவுரீஸ்வரன், மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்