ஓட்டேரியில் பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்களுக்கு துணை கமிஷனர் நூதன தண்டனை 12 அதிகாரங்களில் வரும் திருக்குறளை பொருளுடன் ஒப்புவிக்க வேண்டும்
2022-09-24@ 00:17:07

சென்னை: ஓட்டேரியில் பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்கள் திறக்குறள்களை படித்து, பொருள் விளக்கத்துடன் ஒப்புவிக்க வேண்டும் என துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஓட்டேரி குயப்பேட்டை படவட்டம்மன் கோயில் தெருவில் சென்னை உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நேற்று பள்ளிக்கு கத்தியுடன் வந்திருப்பதாக தலைமை ஆசிரியர் சாந்திக்கு சக மாணவர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர். உடனே, தலைமை ஆசிரியர் சாந்தி குறிப்பிட்ட அந்த 2 மாணவர்களின் பைகளை சோதனை செய்தார். அதில், ஒரு பள்ளி மாணவனின் பையில் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி தலைமை ஆசிரியர் சாந்தி, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவர்களின் பெற்றோர்களை, காவல் நிலையத்துக்கு வரவழைத்தார். ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா மாணவர்கள் இருவருக்கும் 15 வயது என்பதால் இந்த வழக்கை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் கொண்டு சென்றார். இதுகுறித்து, அவர் மாணவர்களிடம் விசாரணை செய்தார். அதில், புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் இடையே சிறு சிறு பிரச்னைகளுக்காக அடிக்கடி சண்டை நடந்து வந்தது தெரியவந்தது.
எனவே, பாதுகாப்பிற்காக மாணவர்கள் கத்தியை பையில் போட்டு மறைத்து எடுத்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், 2 மாணவர்களிடமும் திருக்குறளில் உள்ள குறிப்பிட்ட 12 அதிகாரங்களில் வரும் அனைத்து திருக்குறள்கள் மற்றும் அதற்கான பொருளை படித்து வரும் 27ம்தேதி கூற வேண்டும். அவ்வாறு கூறவில்லை என்றால் கூடுதலாக 12 அதிகாரங்கள் தரப்படும் என துணை கமிஷனர் தெரிவித்தார். இதையடுத்து, மாணவர்கள் இருவரும் குறிப்பிட்ட நாளில் துணை கமிஷனரிடம் கூறுவதற்காக திருக்குறளில் குறிப்பிட்ட 12 அதிகாரங்களையும் படித்து வருவதாக உறுதி அளித்தனர்.
Tags:
Otteri School Knife Student Deputy Commissioner Punishment ஓட்டேரி பள்ளி கத்தி மாணவர் துணை கமிஷனர் நூதன தண்டனைமேலும் செய்திகள்
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!