தீன்தயாள் உபாத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் ஆங்கிலம், மென்திறன் பயிற்சி பாட திட்டத்தை தரப்படுத்தும் ஒப்பந்தம்: மகளிர் மேம்பாட்டு நிறுவனம்-பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து நடத்துகிறது
2022-09-24@ 00:17:03

சென்னை: தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் மற்றும் மென்திறன் பயிற்சி பாடத் திட்டத்தினை தரப்படுத்துதல் குறித்து இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்-பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம் இணைந்து செயல்படும் கூட்டணி செயல்பாட்டு ஒப்பந்தம் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் முன்னிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ்(DDU-GKY)ஆங்கிலம் மற்றும் மென்திறன் பயிற்சி பாடத்திட்டத்தினை தரப்படுத்துதலுக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும்-பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனமும் இணைந்து செயல்படும் கூட்டணி செயல்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தின் ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு 20க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ் 80க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் 130 பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் மூலம் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிக்கு பின் உரிய வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தை தொழில் நுட்ப உதவி நிறுவனமாக கொண்டு செயல்படுத்திட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து DDU-GKY பயிற்சி நிறுவனங்களை சார்ந்த ஆங்கில அறிவு மற்றும், மென்திறன்பயிற்சி வழங்கும் பயிற்சியாளர்களுக்கும் இந்நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு அவர்கள் வாயிலாக DDU-GKY திட்டத்தின் கீழ் பயிற்சி பெற உள்ள 40000 இளைஞர்களுக்கு தரத்துடன் கூடிய சிறந்த ஆங்கில அறிவு பயிற்சி கிடைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
Tags:
Under Deendayal Upadhyaya Rural Skill Training Programme English Soft Skills Training Syllabus Agreement Women Development Agency-British Council தீன்தயாள் உபாத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் ஆங்கிலம் மென்திறன் பயிற்சி பாட திட்டம் ஒப்பந்தம் மகளிர் மேம்பாட்டு நிறுவனம்-பிரிட்டிஷ் கவுன்சில்மேலும் செய்திகள்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இருப்பிடத்தினை சென்னை பஸ் செயலி மூலம் அறிந்து கொள்ளும் சேவை விரிவு படுத்தப்பட உள்ளது: அமைச்சர் சிவசங்கர் தகவல்..!
கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வாய்ஜாலம் காட்டும் ஒன்றிய அரசு பட்ஜெட்: தொல். திருமாவளவன் கண்டனம்
மாங்காட்டில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!