குப்பையில் கோட்டை விட்ட பஞ்சாப் அரசு: ரூ.2,180 கோடி அபராதம்
2022-09-24@ 00:16:27

புதுடெல்லி: குப்பைகள், கழிவு நீர் மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காக பஞ்சாப் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது. நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள்- 2016ன்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேடுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப்பில் ஏற்பட்டுள்ள சுற்றுசூழல் பாதிப்பு குறித்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் திட மற்றும் திரவக்கழிவுகளை அப்புறப்படுத்த தவறியதற்காக பஞ்சாப் அரசுக்கு ரூ.2,180 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதில், ரூ.100 கோடியை ஏற்கனவே மாநில அரசு செலுத்தியுள்ளது. மீதி அபராதத் தொகையான ரூ.2080 கோடியை 2 மாதத்திற்குள் செலுத்த வேண்டும்,’ என்று நீதிபதி கோயல் உத்தரவிட்டார்.
Tags:
Fort in Garbage Punjab Government Rs 2 180 crore fine குப்பையில் கோட்டை பஞ்சாப் அரசு ரூ.2 180 கோடி அபராதம்மேலும் செய்திகள்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுடன் நடிகர் சரத்குமார் திடீர் சந்திப்பு
முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்
31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!