SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒருவருடன் 2 நாட்கள் மட்டுமே உல்லாசம்: 7வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண ராணி சிக்கினார்

2022-09-23@ 18:03:21

நாமக்கல்: நாமக்கல் பரமத்தி அருகே 6 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி, 7வது நபரை திருமணம் செய்ய வந்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் அவரை வளைத்துப்பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள வெங்கரை அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (35 ).இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (26 ) என்பவருக்கும் கடந்த 7ம் தேதி புதன்கிழமை அன்று கொளக்காட்டுப்புதூர் அருகே உள்ள புதுவெங்கரைஅம்மன் கோவிலில் உறவினர்கள் புடை சூழ திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் பெண் வீட்டின் சார்பில் அவரது அக்கா, மாமா எனக்கூறி இருவரும், மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் பாலமுருகன் ( 45 ) என்று 3பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணத்தை முடித்துவிட்டு பெண் புரோக்கர் பாலமுருகன் திருமண கமிஷன் தொகையாக ரூ.1.50லட்சத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். புது வாழ்க்கை தொடங்கிய தம்பதிகள் தங்களது வாழ்க்கை பயணத்தை தொடங்கினர். நீண்ட கனவுகளுடன் சென்ற புது மாப்பிள்ளை தனபால் 9ம் தேதி காலை எழுந்து பார்த்தவுடன் தனது மனைவியை காணவில்லை. பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் என்று வந்தது.

புரோக்கர் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்களாக வந்தவர்களின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. உடனடியாக பீரோவை திறந்து பார்த்தபோது கல்யாண பட்டு புடவை, மணப்பெண் கொண்டு வந்த துணிமணிகள் அனைத்தும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த தனபால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார்.

இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்ய மணமகளை தேடிய போது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. உடனடியாக உஷாரான தனபால் மற்றும் உறவினர்கள் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமியிடம் (45) பேசி உள்ளனர். மணமகனின் போட்டோவை புரோக்கரிடம் கொடுத்துள்ளனர். அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்து உள்ளது என பேசி போன் மூலமே முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து நேற்று காலை திருச்செங்கோட்டில் திருமணம் செய்வதாக முடிவு செய்து விடியற்காலை ஆறு மணிக்கு சந்தியா, தனலட்சுமி உறவினர் ஐயப்பன் ஆகியோர் டாட்டா ஜஸ்ட் காரில் திருச்செங்கோடு வந்துள்ளனர். அப்போது அங்கு தனபால் மற்றும் உறவினர்கள் அங்கு காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த சந்தியா வசமாக சிக்கிக்கொண்டார். மணப்பெண் சந்தியா மற்றும் பெண் புரோக்கர், உறவினர் என மூவரையும் தனபால் மற்றும் உறவினர்கள் சுற்றி வளைத்துப் பிடித்து பரமத்தி வேலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மதுரை சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் செய்து வைத்துள்ளனர். தனபாலை அடுத்து ஏழாவதாக திருமணம் நடக்க இருந்த போது சிக்கிக் கொண்டது தெரியவந்தது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு நாள் மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகுவார். இரவில் கணவன் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது சந்தியா உடைமைகளை எடுத்துக்கொண்டு தலை மறைவாகி விடுவார் என்ற அதிரவைக்கும் தகவல் கிடைத்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த புரோக்கர்கள் மூலம் இதுபோல் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த திருமண மோசடி பரமத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே ஏற்கனவே சந்தியாவை திருமணம் செய்து ஏமாந்தவர்கள் யார்? என்று பட்டியல் எடுத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்