திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
2022-09-23@ 14:38:18

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உட்பட பிற உயர்கல்வி நிறுவனங்களை போல், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நாளை (24ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த முகாமில், 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூலம் பணிநியமன ஆணை வழங்கப்படும். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் www.tnou.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா?: ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலைய 2ம் கட்ட பணி; வாகன பார்க்கிங் அமைக்க கடைகளை அகற்ற முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!!
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!