ரூ.58 கோடி ஊழல் மாஜி அமைச்சருக்கு மரண தண்டனை: சீன நீதிமன்றம் அதிரடி
2022-09-23@ 02:10:02

பீஜிங்: சீனாவில் ரூ.58 கோடி ஊழல் செய்த முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் அதிபர் ஜின்பிங், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய அங்கம் வகித்தவர் பூ செங்குவா. சீனாவின் நீதித்துறை அமைச்சராகவும், இருந்தார். இவர் தனது பதவிக்காலத்தில் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்து கொண்டு ரூ.58 கோடி வரையில் ஊழல் செய்ததாகவும், தனது குடும்பத்தினருக்கு சலுகைகள் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்கன் நகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில், நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், செங்குவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு விளையாடும் சிறுவர்கள்: குடும்பம், வீட்டை இழந்து தெருவில் நிற்கும் துருக்கி மக்கள்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது: துருக்கியில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்..!!
சீனாவோடு அல்லது உலகில் வேறு எவருடனும் போட்டியிடும் வலிமையான நிலையில் இருக்கிறோம்: அமெரிக்க அதிபர் உரை
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கனமழையால் வெள்ளம்: குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்த மழைநீர்..!!
அதிபரின் விமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் துப்பாக்கி சூடு
சிறந்த அறிவாற்றல் மாணவியாக 2வது ஆண்டாக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!