SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் போர் பதற்றம்

2022-09-23@ 00:19:51

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரியில் போர் தொடுத்தது., ஏழு மாதங்கள் எட்டிய நிலையிலும் போர் நீடித்து வருகிறது. ரஷ்யப்படைகளை கண்டு அஞ்சிய உக்ரைன் ராணுவம் மேற்கத்திய நாடுகளின் துணையோடு ரஷ்யாவுக்கு வலுவான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ரஷ்ய படைகள் திக்குமுக்காடி வருகிறது. இதனால் கோபமடைந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனுக்கு ஆயுதங்கள் தந்து உதவி செய்யும் மேற்கத்திய நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் போரை தீவிரப்படுத்தும் வகையில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த பிராந்தியங்களில் ஓட்டெடுப்பு நடத்த இருக்கிறது. ரஷ்யாவின் இந்த முயற்சிக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் நியூயார்க்கில் நடந்து வரும் ஐ.நா. பொதுக்கூட்டத்திலும் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கவலைப்படாமல் தனது ராணுவத்தக்கு மூன்று லட்சம் வீரர்களை திரட்டும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.  

ரஷ்யாவின் தான் தோன்றி தனமான முடிவுகளை கண்டு கொதித்து போன நேட்டோ அமைப்பு, ரஷ்யா மீது அணு ஆயுதம் ஏவுவதற்கு கூட தயாராக இருக்கிறோம் என்று மிரட்டியுள்ளது. இதற்கும் அஞ்சாத அதிபர் புதின், நேட்டோ நாடுகளை விட எங்களிடம் அதிக அளவில் அணு ஆயுதங்கள் இருக்கிறது. எங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக உள்ளோம் என்று கர்ஜித்து பொறுப்பில்லாமல் பேசும் மேற்கத்திய நாடுகள் இத்தோடு தங்களின் எதிர்மறையான கருத்துகளை நிறுத்திக்கொள்ளாவிட்டால் விளைவுகள் மோசமாகும் என்று கூறியுள்ளார்.

இது இப்படி இருக்க, ஐநா உலக தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டுள்ளது. எங்கள் நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகளை கொலை செய்த குற்றங்களுக்காக ரஷ்யாவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும். போர்க்குற்றங்களுக்காக ரஷ்யாவுக்கு வழங்கும் தண்டனை பிற நாடுகளை ஆக்கிரமிக்க நினைக்கும் நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

போரினால் உக்ரைன் நாடு கடும் சேதமடைந்துள்ளது. இதற்கெல்லாம் இழப்பீடு தர வேண்டும் என்று ஒருபக்கம் உக்ரைன் கோரிக்கை விடுத்து வருகிறது. மறுபுறம் ரஷ்யா ஓயாமல் போரை தொடர்வதால் பதற்றம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசுகையில், ‘போருக்கான நேரம் இதுவல்ல’ என்று உக்ரைன்-ரஷ்யா போர் குறித்து கருத்து தெரிவித்தார். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை வரவேற்று ஐநா சபையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ‘இந்தியாவின் நிலைப்பாடு சரியானது’ என்று பாராட்டியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்