SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் அழகு கலை நிபுணர் கொலை நடந்தது எப்படி? எலெக்ட்ரிக் கட்டிங் மெஷின் மூலம் 12 துண்டாக வெட்டினோம்: கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

2022-09-23@ 00:19:41

கோவை: கோவையில் அழகு கலை நிபுணரை கொலை செய்த வழக்கில் கைதான கள்ளக்காதலி உள்பட 3 பேரும் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் எலெக்ட்ரிக்  கட்டிங் மெஷின் மூலம் உடலை 12 துண்டுகளாக வெட்டினோம் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தலை கிடைக்காவிட்டால் வழக்கை போலீசார் கைவிட்டு விடுவார்கள் என நினைத்ததாக கள்ளக்காதலி கூறியுள்ளார். கோவை அருகே துடியலூர் வி.கே.எல் நகரில் துண்டிக்கப்பட்ட ஆணின் இடது கையின் ஒரு பகுதி குப்பை தொட்டியில் கிடந்தது. துடியலூர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கை  ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த அழகு கலை நிபுணர் பிரபு (39) என்பவருடையது என்று கண்டுபிடித்தனர். அவரது கள்ளக்காதலி கவிதா, கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீசியன் அமுல் திவாகர், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான கவிதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்ததாவது: அழகு கலை நிபுணரான பிரபு எனக்கு மசாஜ் தெரபி அளித்தபோது நெருக்கம் ஏற்பட்டது.  கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் ஜாலியாக இருப்போம். அப்போது எனக்கு தெரியாமல் பிரபு செல்போனில் ஆபாச போட்டோ எடுத்துள்ளார். எனக்கு அமுல் திவாகர் மற்றும் கார்த்திக்குடனும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் பிரபுவிடமிருந்து விலக முயன்றேன். இதையறிந்த பிரபு அவர்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று கூறி, எனது ஆபாச போட்டோக்களை காட்டி, குடும்பத்தில் இருந்து உன்னை பிரித்து விடுவேன் என மிரட்டினார். அவரது டார்ச்சர் தாங்காமல் அமுல் திவாகர், கார்த்திக்கிடம் கூறி புலம்பினேன்.

இதையடுத்து இடையர்பாளையத்தில் உள்ள அமுல் திவாகர் வீட்டுக்கு பிரபுவை அழைத்து சென்று கொலை செய்ய முடிவு செய்தோம். பிரபுவை அமுல் திவாகர், கார்த்திக் ஆகியோர் திட்டமிட்டபடி கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு என்னிடம் தகவல் சொன்னார்கள். தலை கிடைக்காமல் இருந்தால் போலீசார் இந்த வழக்கை விட்டுவிடுவார்கள் என நினைத்தோம். பிரபு காணாமல் போனதாக புகார் வந்ததும் போலீசார் என்னிடம்தான் விசாரித்தார்கள். நான் எதுவும் தெரியாததுபோல் காட்டி கொண்டேன். ஆனால் அவரது செல்போன் தொடர்பை வைத்தும், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்தும் விசாரித்து கொலையில் எனக்கு இருந்த தொடர்பை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான அமுல் திவாகர், கார்த்திக் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: எங்களுக்கு கவிதாவுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதால் அவர் கூறியபடி கொலை செய்ய ஒப்புக்கொண்டோம். கவிதா குறித்து விஷயங்களை பேசி  முடிவு செய்யலாம் என சொல்லி பிரபுவை அழைத்தோம். அதன்படி காந்திமாநகருக்கு அழைத்து சென்றோம். அங்கே வீட்டிற்குள் சென்றதும், நாங்கள் தயாராக வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டினோம். கீழே விழுந்த அவரை பல இடங்களில் வெட்டினோம். இதில் பிரபு ரத்த வெள்ளத்தில் இறந்துவிட்டார். நான் (அமுல் திவாகர்) எலெக்ட்ரீசியனாகவும், கார்பெண்டராகவும் வேலை செய்ததால் அலுமினியம், கம்பி துண்டிக்கும் எெலக்ட்ரிக் கட்டிங் மெசின் இருந்தது.

அதன் மூலம் பிரபுவின் கை, கால், மார்பு பகுதி, தொடை, கால் என உடலை 12 துண்டாக வெட்டினோம். அந்த பாகங்களை டிராவல் பேக்கில் அடைப்பதற்கு ஏற்ற வகையில் வெட்டினோம். உடல் பாகத்தில் இருந்து ரத்தம் வடிவதை தடுக்க பிளாஸ்டிக் கவரை சுற்றி அதை 3 பேக்கில் அடைத்து வைத்தோம். இரண்டு பேக்கில் இருந்த தலை, முண்டம், கை, கால் என 8 துண்டுகளை எடுத்து கொண்டு நீர் நிலையில் வீசலாம் என பைக்கில் புறப்பட்டோம். வழியில் வெள்ளக்கிணறு பகுதியில் குப்பைத்தொட்டி இருந்தது. அங்கு சென்றதும் அதில் வீசிவிட நினைத்தோம். பேக்கோடு வீசாமல் இடது கையின் முழங்கை பகுதி வரை உள்ள பாகத்தை எடுத்து முதலில் வீசினோம்.

அதற்குள் ஆட்கள் நடமாடியதால் அங்கிருந்து சென்றுவிட்டோம். பின்னர் மீதம் இருந்த தலை உட்பட 7 பாகங்களை துடியலூரில் உள்ள பாழடைந்த குப்பைகள் கொட்டும் கிணற்றில் வீசி விட்டோம். பேக்கை தனியாக கிணற்றில் வீசினோம். பின்னர் வீட்டிற்கு சென்று இன்னொரு பேக்கை எடுத்துக்கொண்டு பீளமேடு பகுதிக்கு சென்றோம். சங்கனூர் பள்ளம் வழியாக சென்றபோது அங்கே வீச முடிவு செய்தோம். ஆனால் மக்கள் நடமாட்டம் இருந்தது. பீளமேடு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சாக்கடை பள்ளத்தில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்றோம். பீளமேட்டில் போட்ட பேக்கில் இரு கால்களின் தொடை பகுதி, இரு கைகளின் மேல் பகுதி இருந்தது. வீட்டிற்கு வந்த பின்னர் அரிவாள், கத்தி, கட்டிங் மெசினை கழுவி எடுத்து வைத்தோம்.

பின்னர் கவிதாவிடம் பேசினோம். திட்டமிட்டபடி எந்த தடையும் இல்லாமல் காரியத்தை முடித்துவிட்டோம். சடலத்தை துண்டு துண்டாக தூக்கி வீசி விட்டோம். இனி  போலீசார் கண்டுபிடிக்கமாட்டார்கள். எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கலாம் எனக் கூறினோம். கவிதாவின் கள்ளத்தொடர்புக்காக தான் நாங்கள் பெரிய திட்டம் போட்டு இந்த கொலையை செய்தோம். ஒரு இடத்தில் சடலம் வீச சென்றபோது போலீசார் வாகன சோதனை நடத்தினர். அவர்களிடம் தப்பி நாங்கள் வேறு பாதையில் சென்று சடலத்தை வீசினோம். இல்லாவிட்டால் சடலத்துடன் போலீசில் சிக்கியிருப்போம். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

* உடலில் 4 துண்டுகள் எங்கே?
பிரபுவின் கை, தலை, உடல் பகுதி என 8 துண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் 2 கைகளின் மேல் பகுதியும், 2 கால்களின் மேல் பகுதியும் என 4 துண்டுகள் கிடைக்கவில்லை. அவற்றை போலீசார் தேடி வருகிறார்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்