காங்கிரசுடன் கூட்டணி மம்தாவுடன் பேசி விட்டே பவார் சொல்லி இருப்பார்: திரிணாமுல் காங்கிரஸ் கருத்து
2022-09-23@ 00:19:24

கொல்கத்தா: ‘மம்தா பானர்ஜியுடன் பேசிய பிறகே காங்கிரசுடன் கூட்டணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் தயார் என்று சரத் பவார் அறிவிப்பு வெளியிட்டு இருக்கலாம்,’ என்று திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கடந்த கால கசப்பான அனுபவங்களை கைவிட்டு, 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நலனுக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறார். அவர் தனது கடந்த கால அனுபவங்களை தேசிய நலன்களுக்காக கைவிட்டு, புதிய கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைய தயாராக உள்ளார்,’ என்று தெரிவித்தார். இது பற்றி கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் சவுகதா ராய், ‘சரத் பவார் இந்த நாட்டின் மிக பெரிய தலைவர். மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தாமல் அவர் இந்த கருத்தை கூறியிருக்க மாட்டார்,’ என்றார்.
Tags:
Alliance with Congress Mamata Pawar Trinamool Congress opinion காங்கிரசுடன் கூட்டணி மம்தா பவார் திரிணாமுல் காங்கிரஸ் கருத்துமேலும் செய்திகள்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!