SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரலாறு காணாத சரிவு!: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80.67-ஆக சரிந்தது..!!

2022-09-22@ 16:17:35

டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 80.67 காசுகளாக சரிவை கண்டுள்ளது. இந்திய பங்குசந்தையும் கடும் சரிவை சந்தித்திருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதத்தை நேற்று உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான பண மதிப்பு பல்வேறு நாடுகளில் சரிவை கண்டது. நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் குறைந்து 79.96 காசுகளாக சரிந்தது.

இந்நிலையில் இன்றும் ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சியை கண்டு வருகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80.67 காசுகளாக சரிந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவாகும். இதனிடையே பங்குசந்தையிலும் கடும் சரிவு காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 550 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 58,900 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 160 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 17,550 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

  • pet-fesitival-mumbai

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

  • france-reform

    பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

  • new-parliament-pic-20

    பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

  • cong-ravi-19

    தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்