பூண்டி ஊராட்சியில் 2 புதிய டிரான்ஸ்பார்மர்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ இயக்கினார்
2022-09-22@ 15:12:53

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சியில் உள்ள ஜெயராமன் தெருவில் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டிலும் பூண்டி பேருந்து நிலையம் அருகில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டது. இந்த விழாவுக்கு மின்சாரவாரிய செயற்பொறியாளர் கனகராஜ் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் கே.யுவராஜ், இளநிலை பொறியாளர் குமரவேல், ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால், ஊராட்சி தலைவர் சித்ரா ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
திமுக ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி, மாவட்ட நிர்வாகிகள் ஐ.ஏ.மகிமைதாஸ், ப.சிட்டிபாபு, கே.யு.சிவசங்கரி, தா.மோதிலால், ஒன்றிய நிர்வாகிகள், பட்டரை கே.பாஸ்கர், இ.லட்சுமணன், அ.ஆனந்த், பி.தேவேந்திரன், ஜி.டில்லிபாபு, சௌக்கர் பாண்டியன், தா.நடராஜ், எம்.எஸ்.அருண், எம்.லிங்கேஷ்குமார், வி.எஸ்.சதீஷ் முன்னிலை வகித்தனர். இதில், வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு இரண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை இயக்கி வைத்தார். விழாவில், பொன்.பாண்டியன், பி.சரவணன், எம்.எழில், எம்.கௌதம், பி.ராஜாசிங் உள்பட கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
காட்டுநாவல் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
ஆண்டிமடம் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-வியாபாரிகள் கோரிக்கை
30 ஆண்டுக்கு முன் காணாமல் போன சாம்பான் குளத்தை கண்டுபிடித்து தாருங்கள்-புகார் எதிரொலியால் அதிகாரிகள் அளவீடு
ராஜபாளையம் அருகே லாரி மோதிய விபத்தில் விவசாயி பலி-நடவடிக்கை கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சேலம்-ஓமலூர் ரயில் பாதையின் மின்வழித்தடத்தை அதிகாரி ஆய்வு-அதிவேக ரயிலை இயக்கி சோதனை
கடவூர், தோகைமலை பகுதியில் கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!