SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

'போர் குற்றங்களுக்காக ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்': ஐநா சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு.. சேதங்களுக்கு இழப்பீடு பெற்று தர கோரிக்கை..!!

2022-09-22@ 13:01:40

ஜெனிவா: உக்ரைனில் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஐநா தலைவர்களை அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியிருக்கிறார். ஐநா பொதுச்சபை உலக தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டுள்ளது, நாங்கள் நியாயமான தண்டனையை தான் கோருகிறோம். எங்கள் மாநில எல்லைகளில் குற்றங்கள் நடைபெற்றுள்ளன. எங்கள் நாட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கும், பெண்கள், குழந்தைகளை கொலை செய்த குற்றங்களுக்காகவும், ரஷ்யாவிற்கு ஐநா சபை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். போர் குற்றங்களுக்கு ரஷ்யாவுக்கு தண்டனை விதிக்கப்படுவது பிற நாடுகளை ஆக்கிரமிக்க நினைக்கும் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்தார். போரினால் உக்ரைன் சந்தித்துள்ள இழப்புகளுக்கு ரஷ்யாவிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்