கொரியா ஓபன் டென்னிஸ் சென்னை ஓபன் சாம்பியன் லிண்டா அதிர்ச்சி தோல்வி
2022-09-22@ 00:20:00

சியோல்: கொரியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், சென்னை ஓபன் சாம்பியன் லிண்டா ஃபிரவிர்தோவா தோல்வியைத் தழுவினார். பெல்ஜியம் வீராங்கனை யானினா விக்மேயருடன் (32வயது, 396வது ரேங்க்) மோதிய லிண்டா (17 வயது, 74வது ரேங்க்) 1-6, 4-6 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 1 மணி, 29நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. யானினா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். சென்னை ஓபன் பைனலில் லிண்டாவிடம் தோற்ற போலந்து வீராங்கனை மாக்தா லினெட் (30 வயது, 51வது ரேங்க்) 6-2, 7-5 என நேர் செட்களில் நெதர்லாந்தின் அரியன் ஹர்டனோவை ( 26 வயது, 130வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா (29 வயது, 129வது ரேங்க்) தகுதிச்சுற்றில் ரியா பாட்டியா (இந்தியா), வாலென்டினி (கிரீஸ்) ஆகியோரை வீழ்த்தி முதன்மை சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை மேடிசன் இங்லிசை வீழ்த்திய அவர், 2வது சுற்றில் நேற்று சீனாவின் லின் சூவிடம் (28 வயது, 70வது ரேங்க்) 1-6, 3-6 என நேர் செட்களில் வீழ்ந்தார். இங்கிலாந்தின் எம்மா ரடுகானு, எகடரினா அலெக்சாண்ட்ரோவா, அன்னா பிளிங்கோவா (ரஷ்யா), டட்யானா மரியா (ஜெர்மனி) ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Tags:
Korea Open Tennis Chennai Open Champion Linda lost கொரியா ஓபன் டென்னிஸ் சென்னை ஓபன் சாம்பியன் லிண்டா தோல்விமேலும் செய்திகள்
168 ரன்னில் நியூசி. படுதோல்வி தொடரை கைப்பற்றியது இந்தியா: ஆட்டநாயகன் ஷூப்மன் கில்
ரஞ்சி கோப்பை காலிறுதி சவுராஷ்டிராவுக்கு எதிராக பஞ்சாப் அணி முன்னிலை: பிரப்சிம்ரன், நமன் திர் அபார சதம்
ஆஸி.யுடன் முதல் டெஸ்ட் ஷ்ரேயாஸ் இல்லை
சில்லி பாயின்ட்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டனாக கிரேக் எர்வின் நியமனம்
டி20 தொடரை கைப்பற்ற போவது யார்? அகமதாபாத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து பலப்பரீட்சை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!