மகளிர் ஆசிய கோப்பை டி20 இந்திய அணி அறிவிப்பு
2022-09-22@ 00:19:58

மும்பை: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் அக்.1 முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நடப்பு சாம்பியன் வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா 6 லீக் ஆட்டங்களில் விளையாடும். இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் மொத்தம் 15 பேர் கொண்ட அணியில் ஜெமீமா ரோட்ரிக்ஸ் மீண்டும் இடம் பிடித்துள்ளார். மணிக்கட்டு காயம் காரணமாக அவர் இங்கிலாந்து டூரில் பங்கேற்கவில்லை. மாற்று வீராங்கனைகளாக விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா, சிம்ரன் பகதூர் இடம் பிடித்துள்ளனர்.
* இந்தியா
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், எஸ்.மேகனா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினேஹ் ராணா, ஹேமலதா தயாளன், மேக்னா சிங், ரேணுகா சிங், பூஜா வஸ்த்ராகர், ரஜேஸ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், கிரண் நவ்கிரே.
மேலும் செய்திகள்
இன்று முதல் டி20 ராஞ்சி களத்தில் இந்தியா-நியூசி
ஆஸி ஓபன் டென்னிஸ் பைனலில் ரைபாகினா சபலென்கா
பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி: சென்னை பள்ளிகள் சாம்பியன்; அமைச்சர் அன்பில் கோப்பைகளை வழங்கினார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாட்டை சுருட்டிய ஜடேஜாக்கள்: சரண்டரான சவுராஷ்டிரா
கலப்பு இரட்டையரில் இறுதி போட்டிக்கு தகுதி; பட்டம் வெல்ல விரும்புகிறேன்: சானியா மிர்சா பேட்டி
கே.எல்.ராகுல் -அதியா ஷெட்டிக்கு டோனி பைக், கோஹ்லி கார் பரிசு: ரூ50 கோடி மதிப்பு அடுக்குமாடி வீடு கொடுத்த மாமனார்
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!