பல்லாவரம் பிரதான சாலையில் முறிந்து விழும் நிலையில் மரக்கிளை: பொதுமக்கள் பீதி
2022-09-22@ 00:19:25

பல்லாவரம்: பல்லாவரம் பிரதான சாலையில் முறிந்து விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரக்கிளையால் விபத்து ஏற்படுவதற்குள் அதை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். வாரச்சந்தைக்கு செல்லும் ஓல்டு டிரங்க் சாலை மிக முக்கிய சாலையாக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, பல்லாவரம் பிரதான சாலை வழியாக பயணித்து, நெரிசலில் சிக்காமல் தவிர்த்து வருகின்றனர்.
மேலும் ஓல்டு டிரங்க் சாலையை சுற்றிலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள், வாகன பழுது பார்க்கும் ஒர்க்ஷாப்கள் மற்றும் பல்லாவரம் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமைதோறும் புகழ்பெற்ற வாரச்சந்தையும் நடக்கிறது. பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் பைக், கார், லாரி போன்ற வாகனங்களிலும், கால்நடையாகவும் பல்லாவரம் பிரதான சாலை வழியாக செல்கின்றனர்.
போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், சமீப காலமாக சாலையோரம் உள்ள ஒரு பெரிய மரத்தின் பட்டுப்போன கிளை எந்த நேரத்திலும் முறிந்துவிழும் நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வழியாக செல்பவர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலையுள்ளது. பட்டுப்போன மரக்கிளை அருகிலேயே உயரழுத்த மின்கம்பிகள் செல்வதால், மரக்கிளை முறிந்து விழும் சமயத்தில், மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பட்டுப்போன மரக்கிளை முறிந்துவிழுந்து விபத்து ஏற்படுவதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!