ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம்: மோடி சொன்னது சரிதான்!!! ஐ.நா-வில் புகழ்ந்து தள்ளிய பிரான்ஸ் அதிபர்
2022-09-21@ 21:47:39

நியூயார்க்: ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி கூறியது சரிதான் என்று, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஐ.நா சபையில் பேசினார். உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் போர் குறித்து தனது கவலைகளை வெளிப்படுத்தினார். அப்போது, ‘போருக்கான நேரம் இதுவல்ல’ என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‘உக்ரைன் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு எங்களுக்கு தெரியும். இப்பிரச்னை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம்’ என்றார். பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினிடம் அழுத்தமாக தனது கருத்தை வெளிப்படுத்தியதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வரவேற்றன. இந்நிலையில் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ‘ரஷ்யா - உக்ரைன் இடையிலான போருக்கான நேரம் இதுவல்ல என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியது சரிதான்.
இது மேற்கு நாடுகளை பழிவாங்கவோ அல்லது கிழக்கு நாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகளை எதிர்ப்பதற்கோ அல்ல. சர்வதேச நாடுகளின் இறையாண்மைக்கானது. அனைத்து நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள சவால்களை ஒன்றாக இணைந்து சமாளிக்க வேண்டும்’ என்று கூறினார்.
Tags:
ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் மோடி சொன்னது சரிதான் ஐ.நா-வில் புகழ்ந்து தள்ளிய பிரான்ஸ் அதிபர்மேலும் செய்திகள்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுடன் நடிகர் சரத்குமார் திடீர் சந்திப்பு
முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்
31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!