நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் ரெய்டு
2022-09-21@ 15:27:29

மதுரை: மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான ‘‘அம்மன் உணவகங்கள்’’ காமராஜர் சாலை, அரசு மருத்துவமனை, ஊமச்சிகுளம், ரிசர்வ் லைன், ஒத்தக்கடை ஆகிய இடங்களில் உள்ளன. நேற்று இரவு வணிக வரித்துறை அதிகாரிகள் திடீரென்று இந்த உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஓட்டல்களுக்கு உணவுப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு முறையாக வணிகவரி செலுத்தப்படவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்த ஓட்டல்களின் தலைமை கிளையாக செயல்படும் மதுரை காமராஜர் சாலையில் உள்ள உணவகத்தில் நேற்று இரவு வணிகவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மற்ற கிளைகளிலும் சோதனை நடத்தினர். இன்று காலையும் இந்த சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஓட்டல் பொறுப்பாளர்களுக்கு வணிகவரித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!